ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா.

X

ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது.
ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது. ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் டி. அரங்கண்ணல்இ தாளாளர் பி. மாலலீனா இதுணைத் தாளாளர் மதுவந்தினி அரங்கண்ணல் விழாவைத் தலைமை தாங்கினார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் வி. நாகராஜு வரவேற்புரையாற்றினார். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பி. பிரேம்குமார் வாழ்த்துரை வழங்கினார். அவர் மாணவர்களின் வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று விஷயங்களைப் பின்பற்றும்படி அவர் அறிவுறுத்தினார். முதலாவதாகஇ அலைபேசிகளை கற்றல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டாவதாகஇ 100மூ வருகையைப் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மூன்றாவதாகஇ அவர்களின் படிப்பில் முழு ஈடுபாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார். முதல்வர் டாக்டர் பி. சஞ்சய் காந்தி அனைத்துத் துறைத் தலைவர்களையும் அறிமுகப்படுத்தினார். வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் ஆர். பிரபு மாணவர்களின் வேலைவாய்ப்பு அறிக்கை சமர்ப்பித்தார். ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியின் செயல் இயக்குநர் டாக்டர் எம். மாதேஸ்வரன்இ தனது உரையில் மற்றப் பட்டங்களை விட அதிகச் சம்பளத் தொகுப்பைப் பெறக்கூடிய பொறியியல் பாடங்கள் தான் என்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் வெற்றி பெற 'டுருஊமு' டுளைவநெைபெஇ ரு - ருனெநசளவயனெைபெஇ ஊ - ஊடயசவைலஇ மு - முழெறடநனபந) என்ற வார்த்தையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.சிறப்பு விருந்தினராக ரோட்டரி மேஜர் டொனர் வி.எஸ். பாஸ்கரன் கலந்து கொண்டு தனது உரையில் மாணவர்கள் தங்களின் கல்வியில் முழுப் பொறுப்புடன் ஈடுபட வேண்டியதையும் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டி வலியுறுத்தினார். பெற்றோர் தங்களது குழந்தைகளின் வளர்ச்சியை எப்போதும் கவனித்து நேர்மறையான சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.இவ்விழாவில் கணினி அறிவியல் துறைத் தலைவர் எஸ். செல்வராஜன்இ ரசாயன அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் பாஸ்கரன்இ துணை முதல்வர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் கே. சந்திரமோகன்இ துறைத் தலைவர்கள்இ பேராசிரியர்கள்இ ஊழியர்கள்இ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் அ. செங்கதிர் வேலவன் நன்றியுரை வழங்கினார்.
Next Story