மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காது கேளாதோர் சங்கத்தினர்!

X

தமிழகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிலவும் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி அவர்களை சந்தித்து, தமிழகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிலவும் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்து வாழ்த்துக்கள் பெற்றனர்.இந்த நிகழ்வில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் மாநில தலைவரும்,நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின் செயலாளருமான ர.பழனிசாமி, துணைத் தலைவர் சிக்கந்தர் ராபர்ட், பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், துணை செயலாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் டென்சிங், செயற்குழு உறுப்பினர் மணிவாசகி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story