கண்டெய்னர் லாரியில் டீசல் திருட்டு

X

வேடசந்தூர் அருகே கண்டெய்னர் லாரியில் டீசல் திருட்டு
விருதுநகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் சக்திவேல்(50)இவர், சிவகாசியிலிருந்து கண்டெய்னர் லாரியில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு, ஓசூர் நோக்கி கொண்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மினுக்கம்பட்டி அருகே லாரியை ரோட்டோரம் நிறுத்திவிட்டு தூங்கினார். மீண்டும் எழுந்து வண்டியை ஸ்டார்ட் செய்தபோது இன்ஜின் ஆப் ஆனது. பிறகு டிரைவர் டீசல் டேங்கை பார்த்த போது அதில் இருந்த 80 லிட்டர் டீசல் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story