காவேரிப்பாக்கம் அருகே விஷம் குடித்து பெண் பலி

காவேரிப்பாக்கம் அருகே விஷம் குடித்து பெண் பலி
X
காவேரிப்பாக்கம் அருகே விஷம் குடித்து பெண் பலி
காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 27). இவருக்கும் அய்யம்பேட்டைசேரி கிராமத் தைச் சேர்ந்த சந்தியாவுக்கும் (21), கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வாடகை வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 11-ந் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில் விரக்தி அடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தன்மை வாய்ந்த திரவத்தை குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அந்தப்பகுதி பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சந்தியாவின், தாய் சரிதா (40) நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை எஸ்பி ராமச்சந்திரன் (பொறுப்பு) வழக்குகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story