மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

X

அஞ்சுகுழிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வட்டார அளவில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளுக்கிடையான மண்டல அளவிலான சதுரங்க போட்டி அஞ்சுகுழிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யநாராயணன், சைபர் கிரைம் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஈஸ்வரி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடத்தல் பிரிவு போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். மேலும் மாவட்ட சிறப்பு சிறார் காவல் அலகு மூலம் குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் காவல் உதவி செயலி குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வித் துறையினர் செய்திருந்தனர். நிறைவாக சிறப்பு சிறார் காவல் அலகு சமூகப் பணியாளர் ஜெரோம் நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story