பால் கடையில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்தவர் கைது

பால் கடையில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்தவர் கைது
X
குரும்பப்பட்டியில் பால் கடையில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்த அலெக்ஸ் என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த செங்குறிச்சி, குரும்பப்பட்டியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பால் கடையில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்தனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறும் பால் கடையில் மது விற்பனை செய்த நபரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் வந்தவுடன் மது விற்பனை செய்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பொதுமக்கள் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த பீரோவை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து பீரோவை உடைத்து அதற்குள் வைத்திருந்த மது பாட்டில்களை எடுத்து மதுவை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிய பால் கடை உரிமையாளர் அலெக்ஸ் என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
Next Story