ஜி.டி.என் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது

ஜி.டி.என் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது
X
திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது - 500க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்
திண்டுக்கல் ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ரெத்தினம் அவர்களின் 65 வது பிறந்தநாள் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். பொது மருத்துவ முகாமில் சர்க்கரை,ரத்த அழுத்தம், கண் சம்பந்தப்பட்ட , இருதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட, இசிஜி, ரத்தப் பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் இலவசமாக செய்திருந்தனர். மேலும் ஜிடிஎன் இயற்கை மருத்துவ கல்லூரி சார்பில் நீரிழிவு நோய், உடல் பருமன், கழுத்து வலி தோள்பட்டை வலி, தோல் நோய், ஆஸ்துமா, கர்ப்பப்பை நீர்க்கட்டிகள், குடல் புண், சிறுநீர் கற்கள் உள்ளிட்ட நோய்கள் இலவசமாக இயற்கை சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச பரிசோதனை செய்து கொண்டனர் நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் துரை, கல்வி அலுவலர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ மாணவியர், மருத்துவ குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story