குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி இறப்பு

X

கொடைக்கானல் அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி இறப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை காண்பதற்கு மதுரை அவனியாபுரத்தில் இருந்துஒன்பது நண்பர்களுடன் கொடைக்கானல் வந்தநிலையில் கொடைக்கானலில் இருந்து இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பாரதி அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒராவிஅருவியில் தனது நண்பர்களுடன் குளிக்கும்போதுஅறிவியல் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருவியில் குளித்து கொண்டு கொண்டிருந்த பரத் வயது 25 மூழ்கிய நிலையில் உடன் இருந்த நண்பர்கள் அப்பகுதி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடன் ஊர் மக்கள் சுமார் 2 மணி நேரம் அருவி பகுதிகளில் தேடிய இறந்த நிலையில் வாலிபரை மீட்டுள்ளனர் பின் சம்பவத்தை பற்றிகொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் இறந்த வாலிபரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இறந்த வாலிபர்குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர் அதில் இருவர் ஏற்கனவே இறந்ததாக கூறப்படும் நிலையில் குடும்பத்தில் இருந்த ஒரே ஒருவர் அருவியல் மூழ்கி இறந்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story