கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கு மகளிர் ஆர்வம்

X

கொடைக்கானலில் மக்களுடன் ஸ்டாலின் முகாம் துவக்கம் கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கு மகளிர் ஆர்வம்
தமிழ்நாடு முழுக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் மக்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மக்களுடன் ஸ்டாலின் துவங்கி உள்ள நிலையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மக்களுடன் ஸ்டாலின் முகாம் துவங்கியது. இந்த முகாமில் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வெவ்வேறு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகளிலும் கணினிகள் பொருத்தப்பட்டு மக்களுடைய குறைகளான பட்டா பெறுவது, மின்சாரம் கிடைக்காமல் தவிர்க்கக்கூடிய மக்களுக்கு மின்சாரம் வழங்குவது, கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம் அளிப்பது, குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டு உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முகாம் கொடைக்கானல் முழுக்க நடத்தப்பட இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிக அளவிலான பெண்கள் கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கு ஆர்வம் காட்டி தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள். கலைஞர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் வெறும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மக்களுடன் ஸ்டாலின் என்ற இந்த முகாமில்பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாகவும் வழங்கினார்கள்.
Next Story