டாஸ்மாக் கடையை எதிர்த்து பொது மக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை எதிர்த்து பொது மக்கள் போராட்டம்
எளாவூர் ரயில் நிலையம் அருகே உள்ள இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது குடித்துவிட்டு குடியிருப்பு வாசிகள் பெண்களிடம் தினம்தோறும் மது போதையில் தகராறில் ஈடுபடுவதாகவும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார். எளாவூர் ரயில் நிலையம் அருகே செயல்படும் இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது அருந்தவரும் குடிமகன்களால் பொதுமக்கள் பெண்கள் பல்வேறு சிரமங்களை தினம்தோறும் சந்தித்து வருவதாகவும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடித்துவிட்டு வீட்டிற்குள் அவர்கள் புகுவதாகவும் பெண்களுக்கு தொந்தரவு செய்வதாகவும் மது போதையில் தினந்தோறும் பல்வேறு ரகளைகள் நடப்பதாகவும் சிறு குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் ரயில் பயணிகள் ரயில் நிலையத்திற்கு சாலையில் கடந்து செல்லும்போது பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் அரசு மதுபானக்கடை அருகிலேயே மதுபான விடுதி போன்று குடிமகன்கள் சாலைகளில் குடித்துவிட்டு அட்டகாசம் செய்வதாகவும் இதுகுறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை டாஸ்மாக் மதுபான மேலாளர் வரை பலமுறை மனு அளித்தும் மதுபான கடையை மூடி வேறு இடத்திற்கு மாற்றாமல் உள்ளதால் தொடர்ந்து அவதிக்குள்ளாகியதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி புகார் மனு அளித்தனர் ஏற்கனவே ஆரம்பாக்கம் ரயில் நிலைய பகுதியில் கஞ்சா மது போதை பிரச்சினையால் சிறுமி பாதிப்புக்கு உள்ளான நிலையில் தற்போது எளாவூர் ரயில் நிலையத்திலும் தினந்தோறும் போதை ஆசாமிகளால் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அரசு தலையிட்டு மதுபான கடையை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர.
Next Story