டெங்கு காய்ச்சளை கட்டுப்படுத்த மருத்துவ முகாம்கள்

டெங்கு காய்ச்சல் பரவலாக பரவாமல் தடுக்க ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்படும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில். பங்கேற்ற அமைச்சர் சாமு நாசர் தெரிவித்தார்
டெங்கு காய்ச்சல் பரவலாக பரவாமல் தடுக்க ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்படும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில். பங்கேற்ற அமைச்சர் சாமு நாசர் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சோழவரம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் பி.வே கருணாகரன் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் மார்பக புற்றுநோய் பரிசோதனை நடமாடும் வாகனம் கொண்டு வந்து பரிசோதனை நடைபெற்றது அதேபோன்று டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை காது மூக்கு தொண்டை சிகிச்சை மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன காதில் அடிக்கடி ஏதோ சப்தம் வருகிறது பரிசோதனை மேற்கொண்ட அமைச்சர் மருந்து போட்டாலே காதில் சப்தம் குறைந்து விடும் என பரிந்துரை செய்து அனுப்பினர் அப்போது அவரிடம் வெள்ளானூர் கொள்ளுமேடு உள்ளிட்ட பொதுமக்கள் 45 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுபான்மை மற்றும் வெளிநாடு தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை பரவாமல் தடுக்க போதிய மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Next Story