தாளவாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாளவாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தாளவாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலை, கொங்கள்ளி சாலை, மைசூர் சாலை, தலைமலை சாலைகளில், சாலையோரத்தின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிரிதரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். கடைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும், கடைகளுக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், மேற்கூரைகள், பொருட்கள் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டன. அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story