திருச்செங்கோடு நகராட்சியில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் துவக்கம்

X
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரப் பகுதிகளில் அர்பன் கிரீனிங் பிரச்சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுபசுமையை சிந்திப்போம் பசுமையாக இருப்போம் பசுமையுடன் வாழ்வோம் என்ற தலைப்பில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நகராட்சிகளில் உள்ளகாலியிடங்களில் மியாவாக்கிஎனும் குறுங்காடுகளை உருவாக்குதல் அவ்வாறில் காலியிடங்கள் இல்லாத பகுதிகளில் எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மரக்கன்றுகளை நடுதல் ஆகிய பணிகளில் நகர மன்ற உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார் இது குறித்து நேற்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் திருச்செங்கோடு பொறுப்பு ஆணையாளர் பிரேம் ஆனந்த் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் இதனை அடுத்துசனிக்கிழமை ஆன இன்று திருச்செங்கோடு சந்தைப்பேட்டை அருகில் உள்ள அறிவுசார் மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நகர மன்ற தலைவர் நலினி சுரேஷ் பாபு தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், செல்வி ராஜவேல், திவ்யா வெங்கடேஸ்வரன், ரமேஷ், புவனேஸ்வரி, ரமேஷ், செல்லம்மாள் தேவராசன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நகராட்சி அலுவலர்கள் நகராட்சி பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
Next Story