நாராயணா பள்ளியில் புதிய மாணவர் மன்றம் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நாராயணா பள்ளியில் 2025 - 26 ம் கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர், துணைத்தலைவர், விளையாட்டு துறைத் தலைவர் போன்ற பல்வேறு துறைகளுக்கான தலைவர்கள் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோட்டில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் திருமதி. வளர்மதி அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை பொது மேலாளர் திரு. பாலு அவர்களும் , முதல்வர் திருமதி. சசிகலா அவர்களும், பள்ளியின் துணை முதல்வர்கள் திரு.வன்னி முத்து , திருமதி. ஷர்மிளா, திருமதி. ஷாலினி அவர்களும் , உடற்கல்வி இயக்குநர் திரு. அருண்குமார் அவர்களும் ஆசிரிய ஆசிரியைகள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story