சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பணிகள் துவக்கம்

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 8 இடங்களில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 50 லட்சம் மதிப்பிலான பணிகளை பூமி பூஜை நடத்தி துவக்கி வைக்கப் பட்டது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் மற்றும் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,முன்னாள் நகர செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன் நகர் மன்ற துணைத் தலைவர் கிழக்கு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், நகரச் செயலாளர்கள் சேன்யோ குமார், நகர் மன்ற உறுப்பினர்அசோக் குமார் ஆகியோர் திருச்செங்கோடு நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்கள் அமைக்கவும், காங்கிரீட் சாலைகள் அமைக்கவும், ஹாலோ பிளாக் சாலைகள் அமைக்கவும் பூமி பூஜை நடத்தினர். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் முருகேசன், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், சினேகா ஹரிஹரன் ராதா சேகர், மைதிலி,தாமரைச்செல்வி மணிகண்டன், செல்வி ராஜவேல், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முக வடிவு W.T.ராஜா, கலையரசி சதீஸ்குமார்,ரவிக்குமார், மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story