குடிநீர் குழாய் பதிக்கும் பனியின் போது கிடைத்த பொக்கிஷம்

குடிநீர் குழாய் பதிக்கும் பனியின் போது கிடைத்த பொக்கிஷம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை குறுவட்டம், மின்னாம்பள்ளி கிராமம், சர்வே எண்116/2 இட்டேரி புறம்போக்கு என கிராம கணக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் கிராம பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் , ஜேசிபி எந்திரத்தின் மூலம் குழி எடுத்துக் கொண்டிருந்த டங் என உலோக ஒலி கேட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் மெதுவாக தோண்டியபோது 24 சென்டிமீட்டர் உயரம் மற்றும் 21 கிலோ 450 கிராம் எடை கொண்ட உலோகத்திலான அம்மன் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. அந்த சிலையை குழி தோண்டிய நபர்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கத்திடம் ஒப்படைத்தனர் பெற்றுக்கொண்ட ராஜமாணிக்கம் அதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தார். சிலையை பெற்றுக் கொண்ட தாசில்தார் கிருஷ்ணவேணி அதனை முறைப்படி கருவூலத்தில் ஒப்படைத்து இருப்பதாகவும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பிறகுதான் அது எந்த காலத்திய சிலை அந்த சிலையில் இருக்கிற உருவம் என்ன சாமி என்பது குறித்து தெரியவரும் என தெரிவித்தார்.குடிநீர் குழாய் தோன்றும் போது சிலை கிடைத்த சம்பவம் மின்னாம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story