காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு குறித்து ஆய்வுக் கூட்டம்

X
வரும் ஏழாம் தேதி திருநெல்வேலியில் நடக்க உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை அறிவித்தார்.நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத்தலைவர்டாக்டர் செழியன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியம், மணி,ஈரோடு ரவி, பொதுச் செயலாளர் நந்தகோபால்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம் ஜெகநாதன் காந்தி நடராஜன் காசி விசுவநாதன் செல்வி மணி மாவட்ட பொருளாளர் டிஎஸ்பி பொன்னுசாமி ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் நகர தலைவர்கள் ஜானகிராமன் ராமச்சந்திரன் ராஜா தங்கராசு ஹரி வட்டார தலைவர்கள் குப்புசாமி ராஜா பழனிசாமி முத்துசாமி ஆகியோர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கபாலு கூறியதாவதுகாங்கிரஸ் கட்சி மகத்தான எழுச்சி பெற்று வருகிறதுஓட்டு திருட்டு வாக்காளர்கள் பெயர் நீக்கம் ஆகியவற்றைகண்டுபிடித்து மக்களிடம் ஆதாரங்களுடன் ராகுல் காந்தி எடுத்துக் கூறியதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிமகத்தான எழுச்சியை பெற்று இருக்கிறது. கட்சிக்குபுத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.தமிழக மக்களுக்கு ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அதனால் கிடைத்த எழுச்சி ஆகியவற்றை எடுத்துக் கூறும் வகையிலும் ஓட்டு திருட்டு 60 லட்சம் வாக்காளர்களை நீக்கியது இதனால் பாஜக பெற்ற மோசமான மோசடி வெற்றியை எடுத்துக் கூறும் வகையில் தமிழகத்தில் இதுபோல் வாக்குத்திருட்டு நடந்து விடக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் ஏழாம் தேதி திருநெல்வேலி மாநில மாநாடு நடத்தப்படுகிறது இதில் பெரும் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் குறைந்தபட்சம் கட்சி நிர்வாகிகளாவது மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 2700 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளனர் அவர்களின் 2000 பேராவது குறைந்தபட்சம் மாநாட்டில் கலந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் வரும்போதும் மாநாடு முடிந்து செல்லும் போதும் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன் எனக் கூறினார்.
Next Story