கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் கலைகட்டியஓணம் திருவிழா

கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் கலைகட்டியஓணம் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக ஓணம் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த பண்டிகையை கேரளாவின் அறுவடை திருவிழா என்றும் அழைக்கின்றார்கள். இந்த பண்டிகை கேரளா மட்டுமின்றி கேரளாவை ஒட்டி உள்ள தமிழகப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் ஓணம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வரும் 5-ம் தேதி ஓணம் திருவிழா கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் ஓணம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவ - மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்தும், அத்தப் பூ கோலமிட்டும், ஓணம் பண்டிகையை வரவேற்று கொண்டாடினர். கேரளாவை ஆட்சி செய்த மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப் பூக்கோலம் இட்டு மகிழ்ந்தனர். மேலும், மாணவ மாணவிகள், மகாபலி மன்னர் வேடம் அணிந்து மக்களை சந்திக்க வரும் நிகழ்வும் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டது. தொடர்ந்து, மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில், செண்டை மேள நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். முன்னதாக, இந்த ஓணம் திருவிழாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். சீனிவாசன்குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் அட்மின் இயக்குனர் மோகன், கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சண்முகராஜா திரைப்பட நடிகர் ராஜு ஜெயமோகன், திரைப்பட நடிகை மிருணாலினி ரவி,வீடியோ ஜாக்கிகள் தியா தீபிகா சுந்தர்ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் ஓணம் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்
Next Story