திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை துரத்திய ஒற்றை யானை

X

திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை துரத்திய ஒற்றை யானை
திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை துரத்திய ஒற்றை யானை ஈரோடு மாவட்டம், சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானைகள் அதிகம் உள்ள வனப்பகுதி என்பதால் யானைகள் உணவு தேடி சாலையை கடந்து செல்வதும், சில நேரங்களில் சாலையோரம் உள்ள பச்சை தாவரங்களை சாப்பிட்டுக் கொண்டும் சாலையோரமாக சுற்றி திரிவது வழக்கம். இந்நிலையில் திம்பமலை பாதையில் நேற்று இரவு சென்ற வாகன ஓட்டிகள் வளைவில் யானை நிற்பதை பார்த்து வாகனத்தை நிறுத்திக் கொண்டனர். ரோட்டோரமாக இருந்த மரத்திலிருந்து செடியை பறித்து சாப்பிட்டபடி இருந்த யானை, வாகனத்தை கண்டதும் வாகனத்தை நோக்கி வேகமாக வந்தது. இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்புறமாக செலுத்தி தப்பினார்கள். யானை வாகனங்களை துரத்தும் வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
Next Story