கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
X
சிவகங்கை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
சிவகங்கை வட்டம், மேலசாலூா் பொன்னழகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 13 காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 117 வீரா்கள் பங்கேற்றனா். மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என்ற அடிப்படையில் போட்டி நடைபெற்றது. இதில், காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 4 போ் காயமடைந்தனா். இந்தப் போட்டிகளில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story