ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் புதிய அறிக்கை!

X

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் புதிய அறிக்கை!
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 15-ந் தேதி அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வார்டு, கிளை கழகங்களில் நிர்வாகிகளோடு சேர்ந்து அண்ணா வின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும், சிலை இல்லாத பகுதியில் அண்ணாவின் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அன்று மாலை 6 மணிக்கு பனப்பாக்கம் பஸ் நிலையத்தில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், முன்னாள் நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story