அனுமதியின்றி கல் மண் கடத்திய வாலிபர் கைது!

X

அனுமதியின்றி கல் மண் கடத்திய வாலிபர் கைது!
பாணாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாணாவரத்தை அடுத்த குப்புகல்மேடு பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்த ஒரு மினி சரக்கு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 25) டிரைவர் என்பதும், காட்டுப்பாக்கம் கல்குவாரியில் இருந்து எந்தவித அனுமதியின்றி கல் உடைத்து ஏற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மினி சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். அதேபோல், பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதி பெறாமல் டிராக்டரில் மண் எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொக்லைன் எந்திரத்தின் உதவியோட டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story