கரூரில் தொடரும் மழையால் குளிர்ச்சி.பொதுமக்கள் மகிழ்ச்சி.

கரூரில் தொடரும் மழையால் குளிர்ச்சி.பொதுமக்கள் மகிழ்ச்சி.
கரூரில் தொடரும் மழையால் குளிர்ச்சி.பொதுமக்கள் மகிழ்ச்சி. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் கோடை காலம் போல வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவுநேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று நான்காவது நாளாக கரூர் மாநகரப் பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. வெப்பத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளான கரூர் மாவட்ட மக்கள் தற்போது தொடர் மழையால் குளிர்ச்சி காணப்படுவதால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Next Story