உயர்மின் கோபுரத்தில் பணியில் இருந்த போது தவறி விழுந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.

உயர்மின் கோபுரத்தில் பணியில் இருந்த போது தவறி விழுந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.
உயர்மின் கோபுரத்தில் பணியில் இருந்த போது தவறி விழுந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் முசாபர் வயது 29 இவரது உறவினர் ஹஜ்ரத் பிலால் கான் வயது 44. இருவரும் சென்னையில் செயல்படும்தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த ஒன்றரை மாதங்களாக கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள குள்ளம்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த வியாழக்கிழமை அன்று பணியில் இருந்த போது மாலை 5 மணி அளவில் எதிர்பாராத நேரத்தில் கோபுரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார் மொஸாபர். உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஹஜ்ரத் பிலால்கான் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
Next Story