வஞ்சிநாதன் நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை.

வஞ்சிநாதன் நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை.
வஞ்சிநாதன் நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை மஞ்சுநாதன் நகர் பஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராஜேஸ்வரி வயது 45. இவருக்கு அண்மைக்காலமாகவே அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த ராஜேஸ்வரி புதன்கிழமை காலை 11 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்த ராஜேஸ்வரியின் கணவர் முருகேசன் இதுகுறித்து தாந்தோணி மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story