திம்பம் மலைப் பாதையில் டிராபிக் ஜாம்

X

திம்பம் மலைப் பாதையில் டிராபிக் ஜாம்
திம்பம் மலைப் பாதையில் டிராபிக் ஜாம் சத்தி அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஒரு ஆபத்தான மலைப்பாதையாகும். மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திம்பம் மலைப்பகுதியில் அடிக்கடி காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மீண்டும் காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக செல்லாமல் ஒரே நேரத்தில் வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிற்கின்றனர். அடிக்கடி திம்பம் மலைப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story