போத்தீஸ் ஜவுளி கடையில் வருமான வரி சோதனை.

மதுரை போத்தீஸ் ஜவுளி கடையில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை இன்று காலை 7 மணி 30 நிமிடம் முதல் 10க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் மூலம் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் கடை அடைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் வருமான வரி சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது
Next Story