கரூரில் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளில் கண்தானம்

கரூரில் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளில் கண்தானம்
கரூரில் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளில் கண்தானம் & உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி கட்சி நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. கரூர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாநாகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உட்பட்ட 10 பேர் கண்தானம் மற்றும் உடல்தானம் செய்வதாக பதிவு செய்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலரிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்கவாகிகள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து செய்தியாளரிடம் தெரிவித்த மாநில குழு உறுப்பினர் பாலா பொதுமக்களின் மூடநம்பிக்கைகளை தகர்த்து விஞ்ஞானபூர்வமாக மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் அறிவியல் ஆய்வு செய்ய இந்த உடல் தானம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
Next Story