புதுக்கோட்டை: கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்

X

குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் கடலில் மிதந்து வந்த 20 பார்சல்களை (செப்.,11) மீன்வளத் துறையினர் கைப்பற்றினர். அதில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை போலீசாரிடம் ஒப்படைத்து போலீசார் கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார்?, அதை கடலில் தூக்கி வீசியவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story