கீழப்பாவூரில் பாரதியாா் நினைவு தினம் கொண்டாடினர்

X

பாரதியாா் நினைவு தினம் கொண்டாடினர்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றிய பாரதியாா் மன்றம் சாா்பாக மைதானத்தில் பாரதியாா் திருவுருவப் படத்திற்கு முன்னாள் எம்பி., கேஆா்பி. பிரபாகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் , பாரதியாா் மன்ற ஒன்றியத் தலைவா் தீப்பொறி அப்பாதுரை தலைமை வகித்தாா். தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் செல்வன், முன்னாள் கூட்டுறவு தலைவா் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் தங்கச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதியாா் மன்றத் துணைச் செயலா் ராஜகோபால் வரவேற்றாா். மன்றக் குழு உறுப்பினா் சுந்தர்ராஜ் நன்றி கூறினாா்.
Next Story