பேரிடர் மீட்பு உபகரணங்கள் குறித்து மேயர் ஆய்வு


பேரிடர் மீட்பு உபகரணங்கள் குறித்து மேயர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை இன்று தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., மண்டலங்குழு தலைவர்கள், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story