திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி பங்கேற்பு

X

திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவிலில் நேற்று மாலையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி.சீனிவாசன், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் பரமகுரு, மாநில மருத்துவரணி துணைச் செயலா் செண்பகவிநாயகம், மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் முத்துச்செல்வி, ராஜதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. ஆகியோா் பேசினாா். இந்த கூட்டத்தில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story