குமரி : குழந்தையை கொன்ற தாய்

X

43 நாள் குழந்தை
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (வயது 20). இவர் திண்டுக்கல் மாவட்டம் சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெனிட்டா ஜெய அன்னாளுக்கு கடந்த 43 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி இரவு குழந்தை இறந்தது. கார்த்தி கருங்கல் போலீசில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் தாயை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார். குழந்தை பிறந்ததிலிருந்தே கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்தது. இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் குழந்தை தான் என்ற ஆத்திரத்தில் சம்பவத்தன்று குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story