தென்னிலை கடைவீதியில் நின்றிருந்த பெண் மீது கார் மோதி விபத்து.

தென்னிலை கடைவீதியில் நின்றிருந்த பெண் மீது கார் மோதி விபத்து.
தென்னிலை கடைவீதியில் நின்றிருந்த பெண் மீது கார் மோதி விபத்து. கரூர் மாவட்டம் தென்னிலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி உமாராணி வயது 54 . இவர்புதன்கிழமை மாலை 5:15 மணி அளவில் தென்னிலை கடைவீதி பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள சி.கூடலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி ராஜேஸ்வரி வேகமாக ஓட்டி வந்த கார் நின்று கொண்டிருந்த உமாராணி மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த உமாராணியின் மகன் கார்த்திகேயன் வயது 27 என்பவர் அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடைவீதியில் நின்றிருந்த பெண் மீது கார் மோதி விபத்து. கரூர் மாவட்டம் தென்னிலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி உமாராணி வயது 54 . இவர்புதன்கிழமை மாலை 5:15 மணி அளவில் தென்னிலை கடைவீதி பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள சி.கூடலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி ராஜேஸ்வரி வேகமாக ஓட்டி வந்த கார் நின்று கொண்டிருந்த உமாராணி மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த உமாராணியின் மகன் கார்த்திகேயன் வயது 27 என்பவர் அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story