குளச்சல் : அயரை மீன்கள் விலை வீழ்ச்சி

X

கன்னியாகுமரி
குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டு மரங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது பைபர் வள்ளங்களில் அயரை மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவர்கள் ஏலக் கூடத்தில் வைத்து விற்பனை செய்தனர். சுமார் 160 எண்ணம் கொண்ட ஒரு குட்டை அயரை மீன்கள் ரூ. 800க்கு விலை போனது. இவை முந்தைய நாட்களில் ரூ. 2500 முதல் 3000 வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. மீன்கள் விலை குறைந்ததால் பைபர் வள்ள மீனவர்கள் கவலை அடைந்தனர்.
Next Story