குமரி:  மாயமான போலீஸ்  மனைவி திடீர் உயிரிழப்பு

குமரி:  மாயமான போலீஸ்  மனைவி திடீர் உயிரிழப்பு
X
அருமனை
குமரி மாவட்டம்  குழித்துறை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். அருமனை போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ -யாக உள்ளார். கடந்த 31ஆம் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவரை காணவில்லை என சிமி அருமனை போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சிமி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவர் குறித்த தகவல் கிடைக்காததால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story