திருவட்டார் கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி

X

ஆதிகேசவ பெருமாள் கோவில்
குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நாளை 14ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவிலில் முன்னுள்ள உதயமார்த்தாண்டம் மண்டபத்தில் கிருஷ்ணர், பலராமன் விக்ரங்களை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல் பாடி பக்தர்கள் ஊஞ்சல் ஆட்டுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை, கலச பூஜை, அலங்கார தீபாரதனை நடக்கிறது. முன்னதாக மாலை 6 மணிக்கு நந்தவனம் முனிகள் மடத்தில் சிறப்பு பூஜைகள், ஊர்வலமாக பரளி ஆற்றில் சென்று அங்கு மகா ஆரத்தி மற்றும் பிரார்த்தனைகள் நடக்கிறது.
Next Story