லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

X

அருமனை
குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சலீம் சசி (50) லாரி டிரைவர். இவரது இவரது மூத்த மகன் சஜித் பெங்களூரில் நர்சிங் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அந்த பகுதியில் நடந்த ஒரு உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் சஜித் உட்பட ஆறு பேர் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சஜித் முதல் நபராக சேர்க்கப்பட்டு போலீசாரில் தேடப்பட்டு வந்தார். மகனை வழக்கில் இருந்து விடுவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் முடியாததால் சலீம்சசி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story