ராணிப்பேட்டை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

X

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமாலின் உத்தரவின் பேரில், தக்கோலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிக் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளி குல்லு (எ) தியாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நேற்று அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story