சொத்துக்காக தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை!

X

சொத்துக்காக தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தம்பி பச்சையப்பனை தாக்கி கொலை செய்த அண்ணன் மனோகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. நிலத் தகராறு காரணமாக 2015ஆம் ஆண்டு பச்சையப்பனை கொன்ற வழக்கில் மனோகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயமங்கலம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தார்.
Next Story