சோளிங்கரில் நடமாடும் காய், கனி விற்பனை வண்டி வழங்கிய எம்எல்ஏ

சோளிங்கரில் நடமாடும் காய், கனி விற்பனை வண்டி வழங்கிய எம்எல்ஏ
X
நடமாடும் காய், கனி விற்பனை வண்டி வழங்கிய எம்எல்ஏ
சோளிங்கர் தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக் கலை இயக்கம் 2025-26 திட்டத்தின கீழ் 10 விவசாயிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி தோட்டகலை உதவி இயக்குனர் வேலு தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், காங்கிரஸ் நகர தலைவர் டி.கோபால், உதவி அலுவலர்கள் சீனிவாசன், சிலம்பரசன், பாண்டியன், மேகவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story