கண்டெய்னர்லாரி திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி இளைஞர் உயிரிழப்பு.

கண்டெய்னர்லாரி திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி இளைஞர் உயிரிழப்பு.
கண்டெய்னர்லாரி திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா தும்பிவாடி அருகே உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் வயது 25 இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 11.05 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் தென்னிலை பகுதியில் செயல்படும் தனியார் லேத்ஒர்க் நிறுவனம் அருகே சென்றபோது இவரது வாகனத்தை முந்தி சென்ற ஒரு அடையாளம் தெரியாத கண கன்டைனர் லாரி திடீரென பிரேக் இட்டதால் வசந்த் ஓட்டிச் சென்ற டூவீலர் கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் அறிந்த வசந்தின் மூத்த சகோதரர் கவியரசன் வயது 27 என்பவர் அளித்த புகாரில் தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story