அதிகாரிகளை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்

அதிகாரிகளை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் அண்ணா நகரில், நெடுங்குன்றம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியைச் சுற்றிலும், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில், அரசுக்குச் சொந்தமான நீர்நிலை மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 750 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்இந்த, 750 குடும்பத்தினரின் வீடுகளை கணக்கெடுக்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், நேற்று காலை நெடுங்குன்றம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, 100க்கும் மேற்பட்டோர் நெடுங்குன்றம் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, வீடுகளை கணக்கெடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, ஊராட்சி தலைவர் வனிதா, துணை தலைவர் விஜயலட்சுமி ஆகியோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாததால், வீடுகள் கணக்கெடுப்பு நடத்த முடியாமல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Next Story