தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி ஜவ்வு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி ஜவ்வு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்
X
பொன்னேரிக்கரை, ராஜகுளம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்படும் உயர்மட்ட பாலங்களின் அருகே உள்ள சர்வீஸ் சாலைகளில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நான்கு வழியாக பயன்பாட்டில் இருந்த நிலையில், இச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் நடவடிக்கையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. ராணிப்பேட்டையில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வரையிலான சாலை அகலப்படுத்தும் பணிகள் மிக தாமதமாக நடப்பதால், அங்கு கட்டப்படும் உயர்மட்ட பாலங்கள் இன்னும் முழுமை பெறாமலேயே உள்ளது. பொன்னேரிக்கரை, ராஜகுளம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்படும் உயர்மட்ட பாலங்களின் அருகே உள்ள சர்வீஸ் சாலைகளில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்களிலும் இந்த நெடுஞ்சாலை நெரிசலை சந்திக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலை விரிவாக்கம் பணியை முடிக்காததால், அன்றாடம் வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு கார், பஸ்சில் செல்ல 3 மணி நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர். காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்துார் முதல் வெள்ளைகேட் வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி தேசிய நெடுஞ்சாலையில் நின்றன. விரைவாக தேசிய நெடுஞ்சாலை பணிகளை முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story