அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

X

காஞ்சிபுரத்தில் பட்டியல் இன மக்களுக்காக சேவை செய்வோருக்கு தமிழக அரசு வழங்கும் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்துள்ளார்
காஞ்சிபுரத்தில் பட்டியல் இன மக்களுக்காக சேவை செய்வோருக்கு தமிழக அரசு வழங்கும் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் சேவைகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2025ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர். தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம். https://cms.tn.gov.in/cms அல்லது https://tinyurl.com/ என்ற இணையதளத்திலிருந்து விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை அக்., 20க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story