ஜேடர்பாளையம் அருகே  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல்.

ஜேடர்பாளையம் அருகே  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல்.
X
ஜேடர்பாளையம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.
பரமத்தி வேலூர், செப்.13: நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அலுவலா தங்கவிக்னேஷ் அறிவுரையின் பேரில் நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு சார்பில் பரமத்திவேலூர் வட்டாரம் மற்றும் மோகனூர் பகுதியில் உள்ள ஒரு வாழைத்தார் குடோன் ஆகியவற்றில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரை ஆத்தூர் பரமத்திவேலூர் மற்றும் பெட்டிக்கடைகள், டீகடை மோகனூர் பகுதியில் இயங்கி வரும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வாழைத்தார் குடோனில் 15 வாழைத்தார்கள் வேதிப்பொருட்கள் தெளித்து பழுக்க வைத்தது கண்டறியப்பட்டது. மேலும் செயற்கையாக பழுக்க வைக்க பயன்படும் வேதிப்பொருட்கள் 1.1 லிட்டர் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்து வேதிப்பொருள் தெளித்த 15 வாழைத்தார்களையும் பேரூராட்சியின் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. பரமத்தி வேலூர், வடகரை ஆத்தூரில் 3 டீ கடையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் தடை தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை 20.5 கிலோ கிராம் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்யப்பட்டு 3 கடைகள் மற்றும் வாழைத்தார். குடோன் ஆகியவற்றிக்கு மொத்தம் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் வாழைத்தார்களை வேதிப்பொருள் கொண்டு பழுக்க வைத்தாலோ, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை  விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி கடுமைய நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story