தடுப்பு வலை மூடாமல் செல்லும் வாகனங்களில் இருந்து சாலையில் விழும் குப்பை

தடுப்பு வலை மூடாமல் செல்லும் வாகனங்களில் இருந்து சாலையில் விழும் குப்பை
X
மாநகராட்சி அதிகாரிகள் குப்பை வாகனங்கள் மீது, வலை தடுப்பு போட்டு எடுத்து செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களில், 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள், பஜார் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும் குப்பை டிராக்டர்கள், லாரிகள் மூலமாக அள்ளி சென்று, நத்நதப்பேட்டை ஏரியில் இயங்கும் தரம் பிரிக்கும் கூடாரத்தில் தரம் பிரிக்கப்படுகிறது. மாநகராட்சி சிறிய ரக குப்பை வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பை மீது வலை போட்டு எடுத்து செல்கின்றனர். டிராக்டர், டிப்பர் லாரிகளில் சேகரிக்கப்படும் குப்பை வாகனங்கள் மீது வலை போட்டு எடுத்து செல்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் காலை நேரங்களில் குப்பை வாகனங்களின் மீது தடுப்பு வலை போடாமல் குப்பை எடுத்து செல்கின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து, வாகனங்கள் மீது விழுகின்றன. மேலும், குப்பை வாகனங்களை தொடர்ந்து செல்லும் வாகன ஒட்டிகள் துர்நாற்றத்தில் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குப்பை வாகனங்கள் மீது, வலை தடுப்பு போட்டு எடுத்து செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story