பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுகவினர் உறுதிமொழி

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில்  திமுகவினர் உறுதிமொழி
X
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுகவினர் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுகவினர் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் நகரம், மதுராந்தகம் வடக்கு, கருங்குழி பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஆகிய பகுதிகளில் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் சத்தியசாய், தம்பு, பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகிய தலைமையில் மதுராந்தகம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் MTR.சாரதிமணிமாறன் அவர்களின் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுகவினர் தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
Next Story