சிறுகுன்றம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை

X

சிறுகுன்றம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை
திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சிறுகுன்றம் சாலை உள்ளது.இச்சாலை வழியாக, அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொறியியல் கல்லுாரி, தனியார் பள்ளி, தொழிற்ச்சாலைகள், மற்றும் பகுதிகளுக்கு மக்கள், தொழிலாளர்கள், மாணவ- மாணவியர் சென்று வருகின்றனர். இதில், 300 மீட்டர் சாலை குண்டும், குழியுமாக மழைநேரத்தில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதில், பயணிக்கும் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களும் பழுதாகிறது. எனவே, மேற்கண்ட சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என. வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story