சிறப்பு கிராம சபை கூட்டம்!

X

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில், இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மகளிர் குழுக்களுக்கு உடனடியாகக் கடனுதவி பெற்றுத் தர வேண்டும், தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
Next Story